KP எப்போது கைதானார் ? இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது !

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி, தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் களப்பு வழியாக தப்பிச் சென்றார் என்ற செய்தியை முதல் முதல் ஊடகங்களுக்கு தெரிவித்தவர் KP. பின்னர் மறு நாள் தலைவர் இறந்துவிட்டார் என்று கூறி அழுது புலம்பியதும் KP தான். நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதில் ருத்திரகுமார் முன்னெடுத்துச் செல்ல.

அதற்கு மாற்றாக ள்ளே ஈற் என்ற அமைப்பை தொடங்கவே KP முனைப்புக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் சர்வதேச ஒற்றுமை மையம் என்ற அமைப்பை ஆரம்பிக்க KP மலேசியா சென்றுள்ளார். அங்கே வைத்து பலரோடு அவர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இன் நிலையில் தான் லண்டனில் இருந்த ப.நடேசனின் அண்ணா பூசையா என்று அழைக்கப்படும் லூகாஸ் அம்மான், KP யோடு பேசியுள்ளார். பின்னர் பூசையாவுக்கு இந்தியாவில் இருந்து வைகோ அவர்கள் தொலைபேசி மூலம் அழைப்பை விடுத்துள்ளார்.

இந்தியாவில் இள்ள றோ அதிகாரிகள், வைகோவின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டு. KP இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டதாகவும். அவர்களே இலங்கை அரசுக்கு KP இருக்கும் இடத்தை சொல்ல. இலங்கை அதிகாரிகள் மலேசிய பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்கள் என்று தற்போது இந்தியாவில் இருந்து கசிந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய முன் நாள் றோ அதிகாரி ஒருவர் எழுதியுள்ள நூல் ஒன்றில் இருந்தே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: