முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?

15 மாதங்களின் ஊடாக முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியுமா என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா பாவக்குளம் படிவம்-1 கிராமத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது.,

வடமாகாண தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையே அடுத்து வரும் மாகாணசபை தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், தான் தன்னுடைய பாதையில் செல்வேன் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

தேசிய ரீதியான இனப்பிரச்சனை மற்றும் தீர்வுத்திட்டத்தினை கதைப்பற்காக தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக முதலமைச்சரை கொண்டு வர உள்ளதாக கூறுகின்றார்கள். இந் நிலையில் மீண்டும் முதலமைச்சராகவும், தனியான அல்லது கூட்டு கட்சியாகவும் அவர் வரக்கூடாது என்பதற்காக ஒரு புதுக்கதையை கூட்டமைப்புத் தரப்பினர் சொல்கின்றார்கள்.

மூன்று வருடகாலமாக இடைக்கால அறிக்கையை கொண்டு வந்து அதனை உப்புச்சப்பில்லாமல் ஆக்கியுள்ளதோடு நிபந்தனையற்ற ஆதரவையே இந்த மூன்று வருட காலமாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்னும் இருக்கின்ற 15 மாதங்களில் தேசியப்பட்டியலின் ஊடாக முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியுமா என அவர் தெரிவித்துள்ளார்.

-athirvu

TAGS: