இரவு மணி 2.50: புதிய பிரதமருக்கு இன்று பின்னேரத்தில் பதவிப் பிரமாணம் செய்யப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அவர் கூறியபடி, பிகேஆரின் தலைவரை, இந்தத் தேர்தலில் ஹரப்பான் பயன்படுத்திய சின்னத்தின் கட்சித் தலைவரை, கூட்டணி சாதாரண பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ள செய்தியைத் தொடர்ந்து, பேரரசர் அழைத்துள்ளார்.
பேரரசர் இன்றும் நாளையும் (வியாழக்கிழமை மற்று வெள்ளிக்கிழமை) பொது விடுமுறையாக, தேர்தலுக்கு முன்னதாக ஹரப்பான் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தற்கேற்ப, அறிவிக்கும்படி அரசாங்கத் தலைமைச் செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
“ஆனால், வெற்றி பெற்றவர்களுக்கு விடுமுறை இல்லை” என்று மகாதிர் கூறினார்.