புதிய அரசாங்கம் பழிவாங்கும் செயலில் இறங்காது, மகாதிர் கூறுகிறார்

இரவு மணி 3.00: அம்னோ தலைவர் நஜிப் ரசாக்கின் தவறான செயல்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் தாம் பழிவாங்கும் செயலில் இறங்கப் போவதில்லை என்று கூறினார்.

“நாங்கள் பழிக்குப்பழி வாங்கப் போவதில்லை. நாங்கள் சட்டத்தின் ஆளுமையை மீண்டும் புதுப்பிக்க விரும்புகிறோம்”, என்று மகாதிர் கூறினார்.