பராமரிப்பு பிதமர் நஜிப் ரசாக் இன்று காலை மணி 11.00 அளவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்துவார் என்று அவரது பத்திரிக்கை செயலாளர் ஜோன் லாய் கூறினார்.
அச்செய்தியாளர் கூட்டம் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும்.
பராமரிப்பு அமைச்சர்கள் அஹமட் ஸாகிட், தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், ஹிசாம்முடின் ஹுசேன் மற்றும் கைரி ஜாமாலுடின் ஆகியோர் இன்று அதிகாலையில் நஜிப்பை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அதிகாலை மணி 2.00 க்கு சற்று முன்னர் நஜிப்பின் இல்லத்திலிருந்து கிளம்பிய தெங்கு அட்னான் ஊடகங்களுடன் பேச மறுத்து விட்டார்.
இன்று பிஎன் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தும் என்பதை கைரி உறுதிப்படுத்தினார்.
மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெளிவானது என்று கூறிய கைரி, பிரதமர் ஓர் அறிக்கையை வெளியிடுவார் என்றார்.
நான் மக்களின் தீர்ப்பை மத்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கைரி கூறினார்.