‘பிஎன் ஏமாற்று வேலைகளில் ஈடுபடவில்லை, ஜிஇ14 முடிவுகளே சான்று’

14வது   பொதுத்   தேர்தல்   முடிவுகள்   பிஎன்  ஏமாற்று  வேலைகளில்   ஈடுபடவில்லை    என்பதைக்   காண்பிக்கின்றன    என  அக்கூட்டணியின்   தலைவர்    நஜிப்    அப்துல்   ரசாக்    கூறினார்.

“அவதூறுகள்,  நிந்தனைகள்    உள்பட   தேர்தலின்போது   பிஎன்   ஏமாற்று    வேலைகளில்   ஈடுபடும்   என்றெல்லாம்   கூறித்   தாக்கினார்கள்.

“ஜிஇ14  முடிவுகள்  பிஎன்  எந்தத்   தில்லுமுல்லும்  செய்யவில்லை   என்பதைக்  காண்பிக்கின்றன”,  என  புத்ரா   உலக   வாணிக  மையத்தில்     செய்தியாளர்   கூட்டமொன்றில்   நஜிப்   கூறினார்.