பக்கத்தான் தலைவர் மகாதிர் இன்று மாலை மணி 5 க்கு இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் முகமட் V ஐ காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர் செய்தி கூறுகிறது.
அரண்மனைக்கு மகாதிருடன் பக்கத்தான் கூட்டணியின் இதர நான்கு தலைவர்களும் செல்வர் என்று ஹரப்பானின் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லாவை மேற்கோள் காட்டி ராய்ட்டர் செய்தி கூறுகிறது.
அந்நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் அவர்கள் கூட்டணியின் நான்கு கட்சிகளின் தலைவர்களாக இருப்பர் என்று கருதப்படுகிறது – பிகேஆரின் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், டிஎப்யின் லின் குவான் எங், பெர்சத்துவின் முகைதின் யாசின் மற்றும் அமனாவின் முகமட் சாபு ஆகியோர்.