பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், மலேசியாவின் புதிய அரசாங்கம் 10 பிரதான அமைச்சரவைகளுடன் உருவாகியுள்ளது என்று அறிவித்தார்.
இருப்பினும், அமைச்சர்களின் பெயர் பட்டியல் நாளைதான் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
“முக்கிய அமைச்சுகளைக் கொண்ட சிறிய அமைச்சரவை மட்டுமே தற்போது உருவாக்கப்படும் என நாங்கள் இப்போது முடிவு செய்திருக்கிறோம்.
“நாங்கள் பெரிய அமைச்சரவையை விரும்பவில்லை, ஆனால் சில அமைச்சுகள் உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது,” என்று இன்று, கோலாலம்பூரில் உள்ள அல்புகாரி அறக்கட்டளையில் நடந்த ஊடக மாநாட்டில் மகாதிர் கூறினார்.
புதிய அரசாங்கத்தின் நிதியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, கிராம அபிவிருத்தி அமைச்சு, பொருளாதார அமைச்சு, பொதுத் துறை அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பல்லூடக அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் அமைச்சர்கள் பெயர் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்.