தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனப்படுகொலை வாரம் இந்த ஆண்டும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் செம்மணிபகுதியில் எதிர்வரும் 12 ஆம் திகதி இனப்படுகொலை வாரம் ஆரம்பித்து வைக்கப்படும் எனஅவர் குறிப்பிட்டார்.
யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இனப்படுகொலை வாரம் தொடர்பான அறிவிப்பை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
-athirvu.in