லண்டனில் சிங்களவர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: படத்தை ஓடக் கூடாது என்று அறிவுரை

லண்டனில் வரும் ஞாயிறு(20ம் திகதி) “18.05.2009” என்னும் Kollywood திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் சனல்4ல் கூட காண்பிக்காத பல உள்ளக தகவல்களோடு பல கட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகளை சித்தரிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால். மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதேவேளை கருணா குழுவில் உள்ள சிலர், லண்டனில் இந்த படத்தை ஓடக் கூடாது என்று கூறிவருகிறார்கள். இது இவ்வாறு இருக்க சிங்கள-தமிழ் ஒற்றுமை மையத்தின் லண்டன் கிளை என்று கூறிக்கொண்டு சிலர் புறப்பட்டு. SMS சுகளை அனுப்பி வருகிறார்கள். இந்த குறுஞ்செய்தியில் இப் படம் இசைப் பிரியா தொடர்பாக எடுக்கப்பட்ட படம் என்றும். இதனை வெளியிட்டால் இலங்கை அரசுக்கு அபகீர்த்தி ஏற்படும் என்று சில தமிழர்கள் கூறுகிறார்கள். இதனையே அந்த மையமும் குறுஞ்செய்தியாக பலருக்கு அனுப்பி வருகிறது.

ஒட்டு மொத்தத்தில் இனப் படுகொலை நடந்ததை சித்தரித்து எடுக்கப்பட்ட இந்த 18.05.2009 என்னும் திரைப்படத்தை லண்டனில் காண்பிக்க , சிங்கள கைக் கூலிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்கள். இது இவ்வாறு சென்றால், லண்டனில் அனைத்து விடையங்களிலும் சிங்கள கைக் கூலிகளின் அடாவடித்தனம் அதிகரித்துவிடும் என செயல்பாட்டாளர்கள் அதிருப்த்தி வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, இந்த திரைப்படம் வெற்றிகரமாக வரும் ஞாயிறு(20ம் திகதி) லண்டன் ஹரோவில் உள்ள சபாரி சினிமாவில் ஓடும் என்று கூறப்படுகிறது.

லண்டன் தமிழர்கள் என்றால் சும்மாவா ? மகிந்த ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டியவர்கள் ஆச்சே. இந்த சிங்கள கைக் கூலிகளுக்கா அஞ்சப்போகிறார்கள் ?

2009ம் ஆண்டு இசைப் பிரியாவின் உறவுகள் என்று சொல்லி கோட்டபாயவிடம் பேசி பின்னர் இலங்கையை விட்டு அவர் உதவியோடு தப்பி வந்த சிலரது ரகசியங்கள் அதிர்வு இணையத்தில் தொடர்ச்சியாக வர உள்ளது. இன்று வரை கோட்டபாயவுக்கு விசுவாசமாக இருக்கும் இவர்களின் முகத்திரை விரைவில் கிழியும்.

-athirvu.in

TAGS: