தமிழின படுகொலை வாரத்தின் முதலாவது நாள் செம்மணியில் ஆரம்பம்!

தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாள் அனுஷ்டிப்பு செம்மணியில் நேற்றுக் காலை நடைபெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்கமைய தமிழினப் படுகொலை வாரத்தின் முதலாவது நாளான இன்று காலை செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், குகதாஸ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற படுகொலை வார நிகர்வுகள் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இடம்பெற்று இறுதி நாளான மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: