கருவூலத்தின் தலைமை அதிகாரி இர்வான் செரிகர் அப்துல்லா உடனடியாக பொதுச் சேவை இலாகாவிற்கு (பிஎஸ்டி) மாற்றப்பட்டுள்ளார் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹமாஸ் தெரிவித்தார்.
1எம்டிபியின் தலைவருமான இர்வான் கருவூலத்தின் தலைமை அதிகாரியாகச் செயல்பட இனிமேலும் அனுமதிக்கப்பட மாட்டார் என்று அலி கூறினார்.
மே 14 லிருந்து ஜூன் 13 வரையில், இர்வான் பிஎஸ்டியில் இருப்பார். அவர் கருவூலம் மற்றும் நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட எந்த வேலையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார் என்று அலி இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
இர்வானின் குத்தகைக் காலம் குறைக்கப்படும். அவர் குத்தகை அடிப்படையில் மார்ச் 7, 2017 லிருந்து மார்ச் 6, 2019 வரையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 14, 2018 இல் அவரது ஒப்பந்தத்தை முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அலி மேலும் கூறினார்.