தமிழர்களே வாழக்கூடாது என நடாத்தப்பட்ட கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால்!

தமிழர்களே வாழக்கூடாது என்ற பாணியில் இரசாயனக்குண்டுகளாலும், பல்வேறு எறிகணைகளாலும் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால் பேரவலம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தும், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்து, உறவுகள் அழிக்கப்பட்ட நாளின் கோரமுகமே மே18.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்களே வாழக்கூடாது என்ற பாணியில் இரசாயனக்குண்டுகளாலும், பல்வேறு எறிகணைகளாலும் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால் பேரவலம்.

இத்தாக்குதலில் வயது வேறுபாடின்றி பல்லாயிரம் உயிர்கள் மடிந்தன. பச்சிளம் குழந்தைகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரினதும் ஆத்மா சாந்திபெற வேண்டியும், நடைபெற்ற இக்கொடுமையான செயலுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று முன்னெடுக்கப்படும் அஞ்சலி நிகழ்விற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை வழங்குவதோடு, அன்றைய நாளில் வேற்றுமைகளை மறந்து அனைவரையும் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: