முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சற்று முன் (12.30 PM) நிறைவடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிய வடமாகாணம் முழுவதும் ஊர்வலமாக சென்ற நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வந்ததையடுத்து, மணியோசை எழுப்பப்பட்டு, சீ.வி பொதுச்சுடரினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் தனது தாய், தந்தை இருவரையும் இழந்த யுவதி கேசவன் விஜிதாவிடம் கையளிக்கஅவர் பொதுச்சுடரேற்ற ஏனையவர்களும் சமநேரத்தில் சுடரேற்றிஅஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் உரையாற்றினார், தொடர்ந்து தமிழ் மக்களின் இதயங்களில் ரணங்கள் மாறாத கனதியுடன் யுத்தத்தில் இறந்தவர்களுக்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் பொதுமக்கள் கண்ணீர் சொரிந்து மலர்கள்தூபி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியதுடன் இன்று மதியம் 12.30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவடைந்தது..
இந்த நிலையில் வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பொதுமக்கள், மக்கள்பிரதிதிகள் மற்றும் மதகுருமார் என ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு உணர்வு எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in