நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.

கே. ஜெயக்குமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் போராளியையே, கொழும்பில் உள்ள சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு, புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட, இந்த முன்னாள் போராளி, போரில் ஒரு காலை இழந்தவர். தற்போது, கிளிநொச்சி சந்தையில், காய்கறிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராகவும் உள்ள இவர், கடந்த 18ஆம் நாள் கிளிநொச்சியில் நடந்த நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-puthinappalakai.net

TAGS: