மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் சட்டத்துறை தலைவராக (ஏஜி) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் ஆலோசனைப்படி பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 145 (1) இன் கீழ் இந்த ஏஜி நியமனத்திற்கு பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அரண்மனை அதிகாரி வான் அஹமட் டாலான் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து மலேசியர்களும் இந்த சட்டத்துறை தலைவர் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; சமய மற்றும் இன மோதல்களை உருவாக்கக்கூடாது, ஏனென்றால் ஒவ்வொரு மலேசியரும் இன மற்றும் சமய பேதமின்றி நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று பேரரசர் தெரிவித்ததாக அரண்மனை அதிகாரின் அறிக்கை கூறுகிறது.
வெறும் தமிழர்கள் மட்டும் இந்த நாட்டில் அரசியல் லாபங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஊளை விட்ட சோம்பேறிகள் இல்லாமலே போய்விட்டனர் ! AG மலையாளீ , தொலைத்தொடர்பு அமைச்சர் சிங் , மனிதவள அமைச்சர் தமிழர். இதுதான் ஒற்றுமையின் பலம் ! வெறுமனே தமிழன் தமிழன் என்று முழங்கி கொண்டு இருந்த சோம்பேறிகளுக்கு இடம் மில்லை ! முடிந்தால் ஆப்ரிக்காவில் முயலுங்கள் சோம்பேறிகள் சித்தாந்தத்தை அதுவும் தமிழனை காப்பாத்துறேன் பேர்விழி என்ற போர்வையில் …