ஸ்ரீ லங்கா படைகளால் பாவிக்கப்பட்ட தமிழ் மக்களின் வீடுகள் விடுவிப்பு!

யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா படையினரின் பாவனையிலிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொது மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

யாழ் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் படையினரின் பாவனையில் இருந்த சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

வலி வடக்கு பளை வீமன்காமம் பகுதிக்குட்பட்ட ஜே 236 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இக்காணிகள் கடந்த 28 வருடங்களின் பின்னர் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பதினேழு வீடுகள் பாதிப்புகள் இன்றி இப்பகுதியில் காணப்படுவதுடன் மேலும் சில வீடுகள் சிறு சேதங்களுடனும் காணப்படுகின்றன.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் இன்றையதினம் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

28 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் சென்றமை தொடர்பில் பொது மக்கள் தமது நன்றிகளை ஸ்ரீ லங்கா அரசிற்கும் சம்மந்தப்பட்டவர்ரகளுக்கும் தெரிவித்தனர்.

இதேவேளை இப்பகுதிகளில் மீள்குடியேற்றப்பணிகளை துரிதப்படுத்த தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்தார்.

-athirvu.in

TAGS: