அரசாங்கம் 2018 முழுக்க ரோன்95, டீசல் விலைகளை நிலையாக வைத்திருக்க ரிம3 பில்லியனை ஒதுக்கும்.
இந்த நிதி உதவியைக் கொண்டு ரோன்95 சில்லறை விலை லிட்டருக்கு ரிம2.20 ஆகவும் டீசலின் விலை லிட்டருக்கு ரிம2.18 ஆகவும் நிலைப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் ஓர் அறிக்கையில் கூறினார்.
“இதனிடையே ரோன்97-இன் விலை வாராவாரம் மிதக்க விடப்படும்.. இவ்வாரத்துக்கு இன்று தொடங்கி ஜூன் 13வரை ரோன் 97 லிட்டருக்கு ரிம2.66 என்ற விலையில் விற்கப்படும்”, என லிம் கூறினார்.