பிகேஆர் பல்வேறு அணிகளாக பிளவுபட்டு ஒன்றோடொன்று சர்ச்சையிட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த அதன் தலைவர் டாக்டர் வான் அசிசா கட்சியில் இருப்பது ஒரே அணிதான் என்றார்.
“ஒரே அணிதான் உண்டு. அதுவும் என்னுடைய அணி”, என்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் வான் அசிசா கூறினார்.
பிகேஆரில் பல அணிகள் செயல்படுவதாக ஒரு கருத்து உருவாகக் காரணம் பின்தான் என்றாரவர்.
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா விலகுவார் என்றுகூட ஒரு வதந்தி உலவுகிறது. ஆனால், அவர் பிகேஆர் தொடர்ந்து இருக்கப்போவதை மறுபடியும் உறுதிப்படுத்தியுள்ளார்.