உலக புகழ் பெற்ற பத்துமலை தமிழர் திருக்கோவிலை களங்கப்படுத்தும் வகையில் திட்டமிட்ட ஆகம அணி பேரணியையும் தமது உலக தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை இழிவாக முகநூலில் எழுதிய அருண் துறைசாமியையும் எதிர்த்து நாளை 24/6/2018 காலை 7.00 மணியளவில் தமிழர் சமயம் நடவடிக்கை குழு ஏற்பாட்டில் தமிழர் தேசிய இயக்கங்கள், மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றுகூட இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
தமிழர் வழிபாட்டு தளத்தில் போராட்டம் செய்து தமிழ் கடவுள் முருகனை அவமதிக்கும் திருவாலர் அருண் துறைசாமி போன்ற சில இந்துவெறி தீவிரவாதிகளை நாம் ஒன்றிணைந்து களைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார்.
ஆகவே தமிழ் உணர்வாளர்கள்;
தமிழர் உரிமையை அபகரிக்க, தமிழரை குழப்பிக் கொண்டிருக்கும் இந்த சுயநலமி்க்க கூட்டத்தை நாம் துடைத்தொழிக்க வேண்டும் என்றார் பொறுப்பாளர் திரு. மைத்ரேயர் முத்துராமலிங்கம்.
கோவிலுக்கு ஆதரவாக வரும் பக்தர்கள் மற்றும் மானத்தமிழர்கள் நமது தமிழர் பண்பாட்டு உடை அணிந்து வர வேண்டுகோள் விடுப்பதாக தமிழர் சமயம் நடவடிக்கை குழு கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.
நம் தமிழர்களின் எல்லா திருக் கோயிலில்களிலும் இனி அந்நிய இந்துத்துவா தீவிரவாதி, ஆகமம் அணி போன்ற மந்தைகளை உள்ளே விடாமல் காப்பது நம் தமிழர்களின் கடமையாக கொண்டு சட்டப்படி முடியாமல், குறுக்கு வழியில் திருட்டுத்தனமாக காய்நகர்த்த முயலும் இந்த தீவிரவாதக் கூட்டத்தை நாம் ஒன்றினைந்து முடக்கி தமிழினத்தை காக்கும் கடைசி களமாக பார்க்க வேண்டும் என்றார் தலைவர் திரு. பொன் ரங்கன்.
தமிழர் சமயம் நடவடிக்கை குழு மலேசியா: 016-6944223 ,014-3099379, 017-2307175, 016-4213242, 016-3265727



























ammaa