நிதி அமைச்சர் லிம் குவான் எங் அவரது அதிகாரப்பூர்வமான அறிக்கையில் சீனமொழியைப் பயன்படுத்தியது ஒரு பெரும் தவறல்ல என்றார் மகாதிர்.
அது ஒரு சிறிய தவறு. அதை நான் பெரிய பிரச்சனையாக்க விரும்பவில்லை. சில சமயங்களில் நாம் தவறு செய்கிறோம். சீனர்களிடம் பேசும் போது அவர் சீனமொழியைப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான் என்று பெட்டாலிங் ஜெயாவில் இன்று மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.
சீனர்களிடம் பேசும் போது அமைச்சர் சீனமொழியில் அறிக்கை விடலாம் என்று கூறிய மகாதிர், குவான் எங் செய்தது எப்படி தவறாகக் கருதப்படலாம் என்பதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை.
அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் தேசியமொழியில் இருக்கின்றன. தொழில் நுட்ப பகுதிகள் ஆங்கிலத்திலும் சீனமொழியிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன என்று குவான் எங் அளித்திருந்த விளக்கத்தைத் தொடர்ந்து மகாதிர் மேற்கண்டவாறு கூறினார்.
தாம் தொடர்ந்து இதர மொழிகளை தமது சமூக ஊடகங்களில் பயன்படுத்தப் போவதாக அமைச்சர் குவான் எங் மேலும் கூறினார்.