புத்ரா ஜெயாவைக் கைப்பற்றி 47 நாள்கள் ஆகிவிட்டன. பக்கத்தான் ஹரப்பான் அரசு இன்னும் முழு அமைச்சரவை இல்லாமல் இருக்கிறது.
ஏன் என்று கேட்டதற்கு, அமைச்சரவை பட்டியல் தயாராகி விட்டது. பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும் என்று பிரதமர் மகாதிர் கூறினார்.
ஆனால், எப்போது என்று அவர் கூறவில்லை.
எப்போது பெயர்கள் அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், பதவிப் பிரமாண நிகழ்ச்சியின் போது பெயர்கள் அறிவிக்கப்படும் என்று இன்று மாலை பெட்டாலிக்ன் ஜெயாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கடந்த வாரம் மலேசியாகினி அதன் செய்தியில் பிரதமர் மகாதிர் கூடுதல் 15 பெயர்களை பேரரசரிடம் தாக்கல் செய்துள்ளதாக கூறியிருந்தது.
தற்போது, அமைச்சரவையில் 13 அமைச்சர்கள் இருக்கின்றனர்.