இங் சுவி லிம் சிலாங்கூர் சட்டமன்றத்தின் புதிய அவைத் தலைவராக நியமனம் செய்யப் பட்டுள்ளார். இங் நான்கு முறை செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் துணைத் தலைவர் பாயா ஜராஸ் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் கைருடின் ஒத்மான். இவர் முன்பு பாஸ் கட்சியில் இருந்தார். 14வது பொதுத் தேர்தலுக்கு முன்பு பிகேஆரில் சேர்ந்தார்.
இங், கைருடின் இருவரது நியமனங்களும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இங்கின் நியமனத்தின்வழி, சிலாங்கூரில் இரண்டாவது பெரிய கட்சியாக திகழும் டிஏபி தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர் பதவியைப் பெறுகிறது.