1எம்டிபி அதன் தலைவர் மற்றும் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியை பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இப்பதவி நீக்கம் நேற்றையிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான முடிவு ஜூன் 25 இல் நடைபெற்ற 1எம்டிபியின் வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வேலை நீக்கக் கடிதம் கந்தாவிடம் நேற்று கொடுக்கப்பட்டது.
1எம்டிபியின் தலைவராக கந்தா ஜனவரி 2015 இல் நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரில் அவர் பதவிக் காலம் இன்னொரு ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
கந்தாவின் கருத்தைத் தெரிந்துகொள்வதற்காக மலேசியாகினி அவருடன் தொடர்பு கொண்டுள்ளது.