ஜொகாரி: தலைவர்களின் ஆணவப் பேச்சு, அதுதான் அம்னோ அனுபவிக்கிறது இப்போது

தலைவர்களின்   ஆணவப்போக்குக்காக   மக்கள்   அம்னோவைத்   தண்டித்து   விட்டார்கள்    என்கிறார்   முன்னாள்   அமைச்சர்   ஜொகாரி  அப்துல்   கனி.

கட்சித்   தலைவர்களின்  ஆணவப்பேச்சுத்தான்  14வது  பொதுத்   தேர்தலில்   படுதோல்வியைக்   கொண்டு  வந்தது   என்றாரவர்.

“சில   இடங்களில்  நாம்தான் (அம்னோ   தலைவர்கள்)  மகத்தானவர்கள்   என்று    நினைத்துக்  கொண்டிருந்தோம். அதனால்   மனம்போன  போக்கில்   பேசினோம்.

“அதுதான்   மக்கள்   தண்டித்து   விட்டார்கள்.  (திமிரான)   ஒரு  சிலரை  மட்டுமல்ல.  கட்சியையே   தண்டித்து   விட்டார்கள்.  அதுதான் (பொதுத்  தேர்தலில்)  தோற்றோம்”,  என  ஜொகாரி   இன்று  அம்பாங்கில்   நடைபெற்ற  தித்திவங்சா   அம்னோ   பேராளர்   கூட்டத்தில்  ஜொகாரி   கூறினார்.