நஜிப்பின் வழக்கை செவிமடுத்த நீதிபதி ஓர் அம்னோ பெரிய புள்ளியின் உறவினர்

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கை செவிமடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் ஓர் அம்னோ பெரிய புள்ளியின் உறவினர் என்பதை சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் தெரிந்திருக்கவில்லை.

த ஸ்டார் செய்தியின்படி, நஜிப் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் தோமஸ் இதை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

“நான் இதை முதல்தடவையாகக் கேள்விப்படுகிறேன்”, என்று அவர் கூறினார்.

நீதிபதி சோபியான் ஐந்து-தவணை பகாங் சட்டமன்ற உறுப்பினராகவும், நான்கு தடவைகளில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்த முகமட் ஸோப்பி அப்துல் ரசாக்கின் இளைய சகோதரராவார்.

நஜிப் ரசாக்கும் பகாங்கைச் சேர்ந்தவர். நேற்று நீதிமன்றத்தில் நஜிப்புக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.