மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர்

ஹைதியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங்களை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் பதவி விலகியுள்ளார்.

ஹைதியில் அரசாங்கத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டங்களை அடுத்து ஆளும் கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் உரையாற்றிய பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட், தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: