ஆபத்தான நாடாக ஸ்ரீலங்கா பிரகடனம்!!

உலக காலநிலை மாற்றம் தொடர்பான அவதான சுட்டெண்ணில் இலங்கை தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளதாக ஜேர்மன் வொச் என்ற சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கைக்கமைய 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கை அனர்த்த ஆபத்து தொடர்பான பட்டியலில் 98 வது இடத்தில் காணப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இலங்கை 4ஆம் இடம் வரை முன்னோக்கி வந்துள்ளது.

அது மிகவும் ஆபத்தான நிலைமை எனவும், நீர் அதிகரிப்பு, வறட்சி, கடும் காற்று மற்றும் கடல் அரிப்பு போன்றவையினால் இலங்கை இந்த இடத்தில் உள்ளதாக நீர்வழங்கல், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்ந்தும் அனர்த்த ஆபத்து குறைந்த நாடாக சிந்தித்து செயற்பட முடியாதென ஜேர்மன் வொச் நிறுவனம் அனர்த்த எச்சரிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.

-http://eelamnews.co.uk

TAGS: