இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தபட்சம் பதினைந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரியா ராணுவத்திடமிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் பேரிடர் நிறுவனமான நெமாவின் அதிகாரி ஒருவரும் புதன்கிழமையன்று நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான போர்னோவில் ராணுவ தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்துக்குள் இந்த பிராந்தியத்தில் ராணுவ இலக்கின் மீது நடக்கும் மூன்றாவது தாக்குதல் இது. -BBC_Tamil