தமிழர்களின் காணியை அபகரிக்க முயற்சி : விரட்டியடித்த பொதுமக்கள்!

மகாவலி அபிவிருத்தி” என்ற போர்வையில் சிலர் வயல் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட காணிகளில் வேலை செய்துகொண்டிருந்த மக்களை தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

கொக்கிளாய் அக்கரவெளி பிரதேசத்தில் வயல் செய்வதற்கென விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்களின் முயற்சியில் அப்பகுதியை துப்பரவு செய்து அதனை வயல் செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த சில நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனை அறிந்த “மகாவலி அபிவிருத்தி” என்ற போர்வையில் சிலர் இன்று (18.09.2018) அப் பிரதேசத்தில் புகுந்து வேலை செய்த மக்களை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து கரைதுறைப்பற்று தவிசாளர் க.தவராசா , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான இ.கவாஸ்கர் , கி.சிவலிங்கம் ஆகியோருடன் பிரதேச செயலக காணி பகுதியினர் மற்றும் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளர் இவர்களுடன் அப் பிரதேச மக்கள் அனைவருமாக அணி திரண்டு வாக்குவாதத்தின் பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-athirvu.in

TAGS: