​US செனட் சபை மைத்திரிக்கு எச்சரிக்கை விடுத்தது: சூடு பிடிக்கும் அரசியல் களம் இது தான்!

அமெரிக்க செனட் சபையின் உறுப்பினரும், அதன் தலைவருமான கிருஸ் வான் இலங்கை அதிர்பர் மைத்திரிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இலங்கையின் சட்ட திட்டங்களை மதித்து நடக்குமாறும். பாராளுமன்றில் மகிந்த மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை வெற்றி பெற்றதை ஏற்றுக் கொண்டு, மகிந்தவை உடனே பதவி நீக்கம் செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியப்படுகிறது.

அமெரிக்க செனட் சபையில் பலரது ஆதரவைப் பெற்றவரும், அதன் தலைவராக இருக்கும் கிருஸ் மிகவும் பலம் பொருந்திய அமெரிக்க அரசியல்வாதி ஆவார். அவர் மைத்திரி அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது பெரும் திருப்பதை கொண்டுவரலாம் என்று அரசியல் அவதானிகள் அதிர்வு இணையத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அதேவேளை. அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் தகுதி வாய்ந்த அரசியல்வாதிகாயவும் இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

-athirvu.in

TAGS: