லண்டன் இனியவன் காசு அனுப்ப முன் நாள் புலிகள் செய்த கொலை இதுதான்…

ஈழத்தில் இருந்து லண்டனுக்கு தப்பிவந்த இனியவன் என்னும் முன் நாள் புலிகளின் உறுப்பினர் அனுப்பிய பணத்தை வைத்தே, மட்டக்களப்பில் 2 பொலிசார் சுடப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் அதிர்வு இணையத்திற்கு கிடைத்துள்ளது. அட சுடப்பட்டது இலங்கை பொலிசார் தானே , இது நல்ல விடையம் என்று நீங்கள் நினைத்தால் அது முட்டாள் தனமாகும். ஏன் தெரியுமா ? வாருங்கள் உண்மை செய்திக்கு செல்லலாம்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை பற்றி யாவரும் அறிவீர்கள். அங்கே மகிந்தவுக்கும் ரணிலுக்கும் அதிகாரப் போட்டி இடம்பெற்று வருகிறது. மகிந்தவுக்கான ஆதரவு குறைவடைந்து வருவதால் அவர் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகியுள்ளதாக காட்ட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதற்க்கு அமைவாக அவர் தீட்டிய திட்டம் தான், இந்த பொலிசார் மீதான துப்பாக்கிச் சூடு. இந்தவேலையை செய்து முடிக்க மகிந்தவுக்கு ஆதரவான புலனாய்வுப் பிரிவினர், லண்டனில் உள்ள இனியவை தொடர்புகொண்டு பல லட்சம் ரூபாய்களை கொடுக்க. வெறுமனவே அவர் தலா 2 லட்சம் இலங்கை ரூபாய்களை அனுப்பி. முன் நாள் போராளிகள் இருவரை பிடித்து மூளை சலவை செய்து பொலிசாரை சுட வைத்துள்ளார்.

இதனூடாக புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று சிங்களவர்களுக்கு காட்டி, தானே அதனை அடக்க வல்லவர் என்று சித்து விளையாட்டு காட்ட மகிந்த முற்பட்டுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை. 2009ம் ஆண்டு சரணடைந்த பல போராளிகளை இலங்கை ராணுவம் முகாமில் இட்டது. பின்னர் அவர்களில் சிலரை தெரிவு செய்து கட்டம் கட்டமாக பல வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் திடீரென வெளிநாடு வந்து, தாமே மாவீரர் நினைவு தினத்தை நடத்த உரித்துடையவர்கள் என்று கூறி, பெரும் பிழவை ஏற்படுத்தினார்கள். போதாக்குறைக்கு ஐ.பி.சி என்னும் ஊடகம் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி நடத்துவது போல , யார் நடத்த வேணும் மக்களே எங்கே போகப் போகிறீர்கள் என்று நிகழ்ச்சியை நடத்தி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினார்கள்.

இவ்வாறு இலங்கை ராணுவத்தால் வெளிநாடுகளுக்கு மூளை சலவை செய்து அனுப்பப்பட்டவர்கள், தமது உடலில் உள்ள அடையாளங்களை ஆறிய புண்களை காட்டி பலரை வசிகம் செய்து அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டார்கள். இன்று மகிந்த நினைத்த உடனே அவர் இடும் கட்டளையை நிறைவேற்ற இந்த வெளிநாட்டு முன் நாள் புலிகள் உள்ளார்கள். அனைவரையும் இந்த பட்டியலில் சேர்த்துவிட முடியாது. பலர் இன்னும் தமிழ் ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாடோடு உள்ளார்கள். ஆனால் ஒரு சிலரோ இலங்கை அரசின் அடி வருடிகளாகவே இன்னும் உள்ளார்கள்.

-athirvu.in

TAGS: