தமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..? மலேசிய நாம் தமிழர் இயக்கம் எதிர்ப்பு 

கடந்த 16 பிப்ரவரி  செபெராங் செயா லைட் விடுதியில் நடைபெற்ற “பாக்குமரத் தீவில் தேக்குமரத் தலைவன்” நூல் வெளியீட்டு விழாவுக்கு தமிழினத்தின் பகைவனும் தமிழக அரசியல் வியாதியுமான மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி நாயுடுவின் சிறப்பு வருகையையும் அதன் ஏற்பாட்டாளர்களையும்  மலேசிய நாம் தமிழர் இயக்கம் கடுமையாக எதிர்க்கிறது என இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி  தெரிவித்தார்.

தமிழர் போல் இனமறைப்பு செய்து தமிழக மக்களை ஏமாற்றுவதுடன் ஈழத்தில் தமிழர் தேசியத்தை ஆதரிப்பது போல் பேசுவதும் தமிழ் நாட்டில் அதே தமிழர் தேசியத்தை எதிர்ப்பதும் வாடிக்கையாக கொண்டவர் என்றார்.

அண்மையில் நிகழ்வு ஒன்றில் மலேசியா வந்து திரும்புகையில் விமான நிலையத்தில் “தமிழ் தேசியத்தை பேசிக்கொண்டு ஒரு கூட்டம் வருகிறது அதை நாம் கருவறுக்க வேண்டும்” என்று நிருபர்களிடம் பேசிய காணோளிகளை உலக தமிழர்கள் வலையொளியில் கண்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி கோவை  கம்ம நாயுடு மாநாட்டில் வைகோ முன்னிலையிலே தமிழர்களை “வந்தேறி” என்று இழிவுபடுத்திய தமிழகத்திற்கு வந்து குடியேறிய அவர் கட்சியை சேர்ந்த தனமணியை கண்டிக்காமல் அவருக்கு பதவி உயர்வு அளித்த நயவஞ்க துரோகி தான் வைகோ என்றார் பாலமுருகன்.

இப்படிப்பட்ட  தமிழர் துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..?

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி மீது எங்களுக்கு மரியாதை இருந்தது. ஆனால் இவர் தொடர்ந்து வை. கோபால்சாமி நாயுடு என்ற தமிழர் விரோதியை தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்க செய்வதும்  அழைப்பதும் மலேசிய ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமதிப்பதாகும். இனி மலேசிய தமிழர்கள் இவரையும் புறக்கணிக்கும் காலம் கனிந்து விட்டது என்றார்.

எனவே இன மானம் மொழி மானம் கொண்டவர்கள் இனிவரும் காலங்களில் வைகோ போன்ற தமிழர் இனத்தின் துரோகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து, அவர்களுக்கும் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கும் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

நிகழ்வை கெடுப்பது எங்கள் நோக்கமல்ல… நயவஞ்க தமிழின துரோகிகள் தமிழ் நிகழ்வை தலைமையேற்பதே எங்களின் சிக்கல் என்பதை அறிவார்ந்த தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்…

ஐம்பதாயிரம் ஆண்டு தமிழர் வரலாற்றை ஐம்பது ஆண்டுகளுக்கு சுருக்கிய திருட்டு திராவிட

நயவஞ்சகத்தால் வீழ்ந்த  தமிழர் இனம் இனி மீண்டு எழுச்சி கொள்ள வேண்டும் என மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி கேட்டுக் கொண்டார்.