தமிழர் இனத்தின் எதிரியான வை.கோபால்சாமி நாயுடுவுக்கு வால் பிடிக்கும் அரசியல் கோமாளி சதீசு முனியாண்டிக்கு மானத்தமிழன் பாலமுருகன் வீராசாமியின் பதிலடி

கடந்த 16 பிப்ரவரி செபெராங் செயா லைட் விடுதியில் பாக்குமரத் தீவில் தேக்குமரத் தலைவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு தமிழினத்தின் பகைவன் வை.கோபால்சாமி நாயுடு சிறப்பு வருகையை எதிர்த்து தமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..? என்ற தலைப்பில் மலேசிய நாம் தமிழர் இயக்க சார்பில் ஒரு கண்டன செய்தியை வெளியிட்டிருந்தேன்.

அதற்கு எனக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எண்ணி, தமிழர் தேசிய சிந்தனையை எதிர்க்கும் விதமாக நேற்று தமிழ் மலர் நாளிதழில் தன் நிலை மறந்து, ‘ஆக்கங்கெட்ட கூவை’ என்பது போல அடிமுட்டாள்தனமான பதிவாக சதீசு முனியாண்டி செய்தி பதித்துள்ளார்.

நான் சார்ந்த இயக்கத்தையும் நாங்கள் ஆதரிக்கும் தமிழக கட்சியின் பெயரைக் கூட வெளியிட தைரியம் இல்லாத தொடை நடுங்கி செயலாக இருக்கிறது சதீசு முனியாண்டி அவர்களே..!

தமிழர்களை ‘தமிழர்கள்’ என்றும் தெலுங்கர் மலையாளிகளை, ‘தெலுங்கர் மலையாளிகள்’ என்றும் இதில் உள்நோக்கத்தோடு இனமறைப்பு செய்வோர்களை அடையாளப்படுத்தியும் வருகிறோம். இதில் என்ன தவறு கண்டீர்..? இதிலே என்ன பிழைப்பு இருக்கிறது..?

தன் இனத்தை மறைப்பவன் தன் தாயிக்கு செய்யும் துரோகம் இல்லையா..?

அல்லது அது உங்களுக்கு பரவாயில்லையா..? அப்படியென்றால் தமிழர்களை திராவிடர்கள் என்று மாற்றுவது மட்டும் நியாயமா..? திராவிட செம்பு தூக்கும் சதீசு முனியாண்டி அவர்களே..!

மலேசியாவில் தமிழர் நிகழ்வோ அல்லது தமிழக விருந்தினர் அனுமதியோ, எங்களைதான் கேட்க வேண்டும் என்று எந்த இடத்திலும் நாங்கள் கூறியதில்லை. இன மொழி மான உணர்வு கொண்ட அறிவார்ந்த தமிழர்கள் எந்த நிகழ்வுக்கு யாரை அழைக்கலாம் என்ற இங்கிதம் தெரிந்திருப்பர். அந்தப் புத்திசாலி தனமெல்லாம் உங்களிடம் எதிர்பார்ப்பது மான்கொம்புதான்..?

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யாரை அழைக்க வேண்டும் என்பது அவர்கள் சொந்த முடிவு. அதில் தலையிட எங்களுக்கு உரிமை கிடையாது என்ற உங்கள் கூற்றின்படி மதபேதகர் சாக்கிர் நாய்க் அவர்களை உங்கள் மாண்புமிகு தலைவருடன் ஏன் எதிர்த்தீர்கள்..? அவர் வருவதும் தங்குவதும் கூட்டம் நடத்துவதும் அவர்கள் இன ஏற்பாட்டாளர்கள் உரிமை அல்லவா..? அவர்களுக்கென்றால் எரிகிறது..? உங்களுக்கென்றால் இதமாக இருக்கிறதா..? இது மதிகெட்ட செயல் சதீசு முனியாண்டி அவர்களே..!

கோவை கம்ம நாயுடு மாநாட்டில் வைகோ நாயுடு கட்சியின் முன்னணி பேச்சாளர் என்ற பதிவுக்கு பதில் முன்னிலையிலேயே என்ற வார்த்தை சொற்றோடர் வந்ததை பொய்மூட்டை என்று சுட்டிக்காட்டி வசைப்பாடிய சதீசு முனியாண்டி அவர்களே..!

உங்களின் நிகழ்வு ஒன்றுக்கு வந்து திரும்புகையில் விமான நிலையத்தில் வைகோ நாயுடுவே “தமிழ் தேசியம் பேசிக் கொண்டு வருகிறார்கள், அவர்களை காலுண்ற விடக்கூடாது” என தமிழர் இனத்தின் எதிரியானாரே என எழுதியிருந்தேன். அதைப் பற்றி பேச மறந்து விட்டிரே..? ஏன் பதில் இல்லையா..? அல்லது வைகோ சொல்லி தர வில்லையா..? அப்படி பேசியது தமிழர் நலனுக்கானதா..? அல்லது பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதற்கேப்ப  நீங்களும் தமிழர் இன துரோகியா..?

தனமணி என்ற தெலுங்கு பெண் தமிழர்களை வந்தேறிகள் என கூறியது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டீர்களே..! மகிழ்ச்சி..! எங்கே அதையும் வைகோவிற்காக மறுப்பீர்கள் என்று நினைத்தேன். அப்படியானால் அவர் கூறியது உங்களுக்கு வழிக்க வில்லையா..? அல்லது 80 சதவீத தமிழர்கள் மலேசியாவில் வாழ்கிறார்கள், அவர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, வைகோ நாயுடு மலேசியா வராது தடுக்க மனமில்லையா..?

அந்த பெண்ணின் பேச்சு அறிந்த பிறகு, அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக செய்தி போட்ட சில மணித்துளிகளிலேயே அச்செய்தியை அழித்து நாடகமாடிய செயல்களை படிக்காத மேதை நாங்கள் அறிந்தோம். படித்த முட்டாள் சதீசு முனியாண்டிக்கு எப்படி தெரிந்திருக்கும்..?

வைகோவிற்கு அவர் பெற்றோர்கள் இட்ட இயற்பெயரே கோபால்சாமி நாயுடு தானே. அதைதான் நான் அறிக்கையில் பதிவு செய்திருக்கிறேன். இதில் என்ன மாபெரும் பிழை இருக்கிறது..? அப்படி தவறு என்றால், முழு பெயரை நானே மாற்றி இன்றுமுதல் உங்களைக்கூட “சதீசு இராமசாமி” என்று அழைக்கிறேன் பரவாயில்லையா..? சாதிக்கும் இனத்திற்கும் வித்தியாசம் தெரியாத அரைவேகாட்டு சதீசு முனியாண்டி அவர்களே..!

வை.கோபால்சாமி நாயுடு 20 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதாரம் சிக்கல்களுக்கு குரல் கொடுத்தது உள்ளப்பூர்வமான உண்மை என்றால், தமிழக மண்ணிற்கு, தமிழர்கள் உரிமைக்கு தேவை தமிழர் தேசிய அரசியல்தான். அதை ஏன் மறுக்க வேண்டும்..? அப்படி மறுத்தால் அவர் இதனால் வரை உள்நோக்கத்தோடுதான் செயல்ப்பட்டு வந்து கொண்டிருக்கின்றார் என்பது புரியவில்லையா..? அல்லது அதை உணரும் அளவிற்கு அறிவில்லையா..?

சினிமாத்தன வசனம் பேசுபவர்களை தூக்கிப் பிடிப்பவர்களோ தமிழக தமிழர்களுக்காக எதை சாதித்து விட்டார்கள் என்று தமிழக நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக சாடியிருப்பது கோழை தனம் சதீசு முனியாண்டி அவர்களே..!

அன்னை தமிழக மண்ணின் எதிர்கால நலனுக்காக அந்த மண்ணின் மக்கள் உரிமைக்காக அனைத்து உயிருக்குமான அரசியலை கட்டியெழுப்பி, உலக தமிழர்களுக்கு இன உணர்வு மொழி உணர்வை ஊட்டி, இன்று இனம், மொழி, சமயம், தொன்மை, வரலாறு, பண்பாடு, கலை, கலாச்சாரம், கல்வி, அறிவியல், வாழ்வில், மண்வளம், மலைவளம், காடுவளம், கனிமவளம் காத்து சாதிமத போதமற்ற, பெண்ணியடிமையற்ற, பாலியல் வேறுபாடற்ற தூய தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழ வழிகாட்டியாக இருக்கிறார்கள். இதைவிட என்ன வேண்டும்..?

அதுமட்டுமன்றி அவர்கள் இன்னும் ஆட்சிகே வரவில்லை. இருப்பினும் பலநூறு மீட்சிகளை செய்தும் வருகிறார்கள். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள் கண் விழித்து வெளி உலக நடப்பை பாருங்கள்..?

இன்று தமிழக நாம் தமிழர் கட்சியை குறைக்கூறும் நீங்கள் கடந்த 2008ஆம் ஆண்டு அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கிற அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை வரவழைத்து தேர்தல் பிரசாரம் செய்தீர்களே மறந்து விட்டீர்களா..? அப்போது இனித்தது..? இப்போது கசக்கிறதா..? பச்சோந்தியாகதீர் சதீசு முனியாண்டி அவர்களே..!

வைகோதான் செடெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுகிறார் என்கிறீர்கள். அந்தளவிற்கு நேர்மையானவர் ஏன் செடெர்லைட் திட்டத்தை கையெழுத்திடும் போது வழக்கு தொடுக்க வில்லை..? பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் அரசியல்வாதிகளையும் கார்பெட் கம்பெனி தந்திர மூளையும் வைகோ பார்த்து கொள்வார் என்று தமிழர்கள் பின் வாங்கி அடுத்து பிரச்சனைக்கு தயாராகி இப்பிரச்சனையை மறந்து விடுவதும் மற்றும் பெட்டி கோபாலுக்கு உரிய  நரிதந்திர வேலையும் உலக தமிழர்கள் நன்கு அறிவார்கள் மழுங்கி சதீசு முனியாண்டி அவர்களே..!

இலங்கை தூதர் தாக்கப்பட்ட வழக்கில் சிறை சென்ற நாங்கள், சிறையிலிருந்து எப்படி வெளியில் தமிழர்கள் மட்டும் நிதியளியுங்கள் என்று சொல்ல முடியும். இக்கேள்வியே வடிக்கட்டின முட்டாள் கேள்வியாக இருக்கிறது..? நீங்கள் வெளியில் இருந்தீர்கள் அல்லவா..? நீங்கள் சொல்லியிருக்க வேண்டியதுதானே. “இவர்கள் தமிழ் தமிழர் என பேசுவார்கள் ஆதலால் தமிழர்கள் அல்லாதவர்கள் நிதி அளிக்காதீர்கள் என்று”

ஏன் எங்களை மாற்று இனத்திற்கு எதிரியாக்க முயல்கிறீர்கள்..? எங்கள் இனம், மொழி, சமயம், உரிமை, உடமைக்கு எதிராக கை வைக்காத வரை நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. அனைவரும் ஒன்றாக வாழ்வோம், அவரவர் உரிமையை காப்போம். இது உங்களுக்கு பிடிக்க வில்லையா..? உங்கள் செயல் அறிவுகெட்ட தனமாக இருக்கிறது சதீசு முனியாண்டி அவர்களே..?

தீபாவளி கொண்டாடுபவர்கள் தமிழர் இல்லை என்று நாங்கள் கூறுவதாக கூறுகிறீர்கள். எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறீர்கள்…? தென்னகத்தில் நாய்க்கர் ஆட்சிக்கு முன்பு தீபாவளி எனும் பண்டிகையே இல்லை..? எந்தப் பெருநாளும் அந்த இனத்தின் மரபு வழி வந்திருக்க வேண்டும். ஆரிய திணிப்பால் இடையில் வந்த தீபாவளியை தமிழர்கள் புறக்கணித்து தமது இன பெருநாட்களையே கொண்டாடுமாறு அறைகூவல் விடுத்து பதித்து வருகிறோம். தமிழர் தேசியமும் தமிழர் வரலாறும் சற்றும் அறியாத மூடர் சதீசு முனியாண்டிக்கு இதெல்லாம் எங்கே தெரியபோகுது..?

அன்று மாநில அரசிலும் இன்று ஆளும் அரசிலும் இருந்து கொண்டு, அரசியல் சார்பற்ற எளிய இயக்கமான எங்களை பார்த்து தமிழர்களுக்கு உருப்படியாய் செய்த காரியம்தான் என்ன என்று கேட்கும் கேள்வி படுகேவலமானது. எங்களை ஒருநாள் முதல்வராக அமர்த்தி விட்டு அடுத்த நாள் கேட்க வேண்டிய கேள்வி இது. இருப்பினும் இயன்றவரை தமிழர் இனத்திற்கும் மொழிக்கும் சமயத்திற்கும் பண்பாட்டிற்கும் வழிகாட்டியாக சில செயற்பாடுகளை செய்து வருகிறோம். ஓய்விருந்தால் எங்கள்  அகப்பக்கத்திற்கு சென்று காணுங்கள்..? கத்துக்குட்டி சதீசு முனியாண்டி அவர்களே..!

அரசியல் அதிகாரத்தில் இருந்து, எந்த சேவையும் செய்யலாம் எதையும் பேசலாம். அது இயல்பு. அந்த இடத்திற்கு யார் வந்தாலும் செய்யலாம். ஆனால் ஒன்றுமில்லா இடத்தில் நின்று, இனத்திற்காக முடிந்தவரை  சேவை செய்வதும் உரிமைகாக  போரடுவதுமே சிறப்பு. இதில் குடும்பத்தினருக்காக செலவழிக்க வேண்டிய நேரத்தையும் சொந்த பணத்தையும்  பொதுநலனுக்காக செலவழித்து வருகிறோம். எங்களை வாழ்த்தா விட்டாலும் பரவாயில்லை. மாறாக கொச்சைப்படுத்தாதீர்கள். எங்களை பற்றி பேச சற்றும் அருகதையற்ற சதீசு முனியாண்டி அவர்களே..!

பேராசிரியர் இராமசாமி அவர்களோடு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மதபேதகர் சாக்கிர் நாய்க் விவகாரத்தில் பேராசிரியருக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். விடுதலைப் புலிகளின் தொடர்புடையவர் என்று சர்ச்சையில் அவருக்காக முதல் அறிக்கை விட்டவன். இன்றைய உள்துறை அமைச்சர் முகிடின் யாசின் அப்போது துணைப் பிரதமராக இருந்த போது பேராசிரியர் இராமசாமி அவர்களுடன் மோதலில் அவருக்கு ஆதரவாக முகிடின் யாசினை எதித்தேன். பெர்காசா எனும் தீவிரவாத அமைப்பு தலைவர் இப்ராகிம் அலிக்கும் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்குமான சண்டையில், பேராசிரியர் இராமசாமி உருவ பொம்மையை எரிப்போம் என்ற அவர் ஆதரவாளர்கள் கூறுகையில், இராமசாமி அவர்களின் உருவ பொம்மையை எரித்தால் இப்ராகிம் அலியின் உருவ பொம்மையை நாங்கள் எரிப்போம் என்ற எங்கள் இயக்கம் காணோளியை பார்த்ததுண்டா..? உண்மையில் அவர் பக்கத்தில் இருக்கும் நீங்கள் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்..? அப்போது வாயில் என்ன இருந்தது..? நாக்கில் புண்ணா..? இன்னும் எத்தனையோ எங்கள் நிகழ்வு மற்றும் நடவடிக்கைகளுக்கு பேராசிரியர் இராமசாமி அவர்களே தலைமையேற்க செய்து அவருக்கு உண்டான மரியாதை வழங்கியிருக்கிறோம். எத்தனை கருத்து வேறுபாடனாலும் இனம் என்கிற போது நாங்கள் மிகச் சரியாக நின்றியிருக்கிறோம்.  இதெல்லாம் நன்றிகெட்டவர்கள் மறப்பார்கள். சதீசு முனியாண்டிக்கு இவையெல்லாம் நினைவிருக்கிறதா..?

பெட்டி கோபால் என்ற வைகோவிற்கு வரிந்து கட்டி செய்தி வெளியிடும் சதீசு அவர்களே, செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் சீனப் பள்ளிகளை மூட நானே களமிறங்கி போராடுவேன் என இனவாதமாக பேசிய  முன்னாள் அமைச்சர் நசிரியை கண்டித்து இதேபோல் உங்கள்  அறிக்கை நாளிதழ்களில் பார்த்ததாக தெரியவில்லையே..? தேவையில்லாமல் மலேசிய நாம் தமிழர் இயக்கத்தையும் தமிழக நாம் தமிழர் கட்சியையும் சீண்டுவதை விடுத்து, தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருந்து, ஆக்கபூர்வமான  சேவை செய்ய முயலுங்கள் சதீசு முனியாண்டி அவர்களே..!

நான் நம் இனத்தை தலைமையேற்று செய்தி தந்துள்ளேன். ஆனால் நீங்களோ என்னை தனிப்பட்ட தாக்குதலாக மற்றவர்கள் என்னை வெறுக்க வேண்டும் என்ற வேட்டையில் செய்தி படைத்துள்ளிர்கள். அதிகார ஆவணத்தில் ஆடுபவன் என்றும்  நிலைப்பதில்லை. காலம் சரியான பாடத்தை உங்களுக்கு புகட்டும். காத்திருங்கள் சதீசு முனியாண்டி அவர்களே..!

இறுதியாக சதீசு முனியாண்டியின் அறிக்கையை படித்த பின் ஒரு செய்தி தெளிவாகிறது. இந்தளவிற்கு யூகித்து எழுதக்கூடியவர் இவர் அல்ல. அந்தளவிற்கு பட்டறிவும் இவருக்கு இல்லை என்பது இவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இவர் பின்னால் யாரோ இருந்து இயக்குகிறார்கள் என்பதே உண்மை. அந்த குள்ளநரி நேரிடையாகவே எனக்கு அறிக்கை விடலாம். பதில் தர காத்திருக்கிறேன்.  அப்படி இல்லையென்றால் நேரிடை பொது விவாத மேடையில் சந்திக்கவும் தயார்..? திருட்டு திராவிடமா… அல்லது தமிழர் தேசியமா… என்று பார்த்து விடுவோம் என சதீசு முனியாண்டிக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி சவால் விடுத்தார்.