ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் கற்பிக்கும் அணுகுமுறையை அரசாங்கம் அனுமதிக்கிறது, அதேசமயம் தேசிய மொழியில் கற்பிக்கப்படுவதும் தொடரும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார்.
“மலேசியர்களில் சிலர் இப்பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதை விரும்புகிறார்கள், சிலர் அதனை எதிர்க்கிறார்கள். எனவே, அரசாங்கம் இவ்விஷயத்தில் நடுநிலையாக இருக்க விரும்புகிறது.”
“ஆனால், எல்லாப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கற்றல் கற்பித்தல் நடப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. காரணம், இந்த அணுகுமுறையால் ஒருதரப்பினர் பலனடைவதும் மற்றொரு தரப்பினர் தாங்கள் விரும்பிய மொழியில் படிக்காமல், உரிமையை இழப்பதும் இதன்வழி நடக்க வாய்ப்புண்டு.
“குறிப்பாக, ஆங்கிலம் வழி கற்றவர்களைச் சந்தையில் எளிதாக ஏற்றுகொள்வார்கள் என பலர் நினைக்கிறார்கள்,” என்று பிலிப்பைன்ஸ் வருகையின் கடைசி நாளான இன்று, மலேசிய பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்தார்.