ஜூலியன் அசாஞ்: விக்கிலீக்ஸ் வெளியிட்டபின் உலகை உலுக்கிய ஐந்து முக்கிய தகவல்கள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தாக்குதல் தொடர்பான ஒன்றிலிருந்து தப்பிக்க, ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படக்கூடாது என்று ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார் அசாஞ்சே.

பாதுகாப்புத்துறையின் கணிணிகளில் இருந்து ரகசிய ஆவணங்களை எடுக்க சதி செய்ததாக இவர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அவருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ரகசிய ஆவணங்கள் மற்றும் படங்களை பெறுவதற்கு மற்றும் வெளியிடுவதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஜூலியன் அசாஞ்சே நிறுவினார்.

ஹெலிகாப்டர் தாக்குதல்

ஹெலிகாப்டர் தாக்குதல்

அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, இராக்கின் பாக்தாத்தில் பொதுமக்களை கொல்வது போன்ற ஒரு காணொளியை விக்கிலீக்ஸ் 2010ஆம் ஆண்டு வெளியிட்டது.

அந்தக் காணொளியில் இருந்து வரும் குரல், விமானிகளை மக்களை பார்த்து சுடும்படி வலியுறுத்த, ஹெலிகாப்டரில் இருந்து தெருக்களில் இருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

காயமடைந்தவர்களை ஏற்ற வந்த வேன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் நமிர் நூர் எல்தீன் மற்றும் அவரது உதவியாளர் சயீத் மக் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.

இலங்கை

அமெரிக்க ராணுவ புலனாய்வு

அமெரிக்காவின் முன்னாள் ராணுவ புலனாய்வு ஆய்வாளர் செல்சியா மேனிங் கசியவிட்ட ஆயிரக்கணக்கான ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

ஆஃப்கானிஸ்தானில் நடந்த போர் தொடர்பான ஆவணங்கள், அமெரிக்க ராணுவம் எப்படி நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்றது என்பது குறித்த தகவல்களை அதில் வெளியிட்டது.

அமெரிக்க ராணுவ புலனாய்வுசெல்சியா மேனிங்

இராக் போர் தொடர்பான மேலும் சில ஆவணங்கள், அங்கு 66,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறியது. இது அமெரிக்காவால் அதிகாரபூர்வமாக சொல்லப்பட்ட கணக்கைவிட அதிகமாகும்.

மேலும், இராக் படையினர் எவ்வாறு கைதிகளை துன்புறுத்தினார்கள் என்பது குறித்த தகவல்களும் ஆவணங்களில் இருந்தன.

இதில் அமெரிக்க வெளியுறவு அதிகாரகள் அனுப்பிய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளும் அடங்கும்.

இலங்கை

9/11 பேஜர் செய்திகள்

அமெரிக்காவில் 2001ஆம் நடந்த செப்டம்பர் 11, இரட்டை கோபுரத் தாக்குதலின்போது அனுப்பப்பட்ட சுமார் 5,73,000 பேஜர் செய்திகள் விக்கிலீக்ஸில் வெளியிடப்பட்டன.

குடும்பங்கள் தங்கள் உறவினர்கள் குறித்து விசாரிப்பது, தாக்குதலுக்கு அரசுத்துறைகளின் எதிர்வினைகள் தொடர்பான செய்திகள் ஆகியவை இதில் அடங்கும்.

“அதிபர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். வாஷிங்டன் திரும்பமாட்டார். எங்கு செல்வார் என்று தெரியாது,” என ஒரு செய்தி கூறியது.

இலங்கை

பிரிட்டன் தேசிய கட்சி உறுப்பினர்கள்

பிரிட்டன் தேசிய கட்சி உறுப்பினர்கள்

2008ஆம் ஆண்டில், 13,000க்கும் மேற்பட்ட பிரிட்டன் தேசிய கட்சியின் உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொடர்பு எண்கள் ஆகியவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளுக்கு தடை மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரட்டன் மக்கள் திரும்பி வருவதை ஊக்குவித்தல் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கை பரிந்துரைத்திருந்தது.

தகவல்களை வெளியே கசியவிட்டதாக முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.

இலங்கை

சோனி பிக்சர்ஸ் ஹேக்

சோனி பிக்சர்ஸ் தொடர்பாக 1,70,000 மின்னஞ்சல்கள் மற்றும் 20,000 ஆவணங்களை 2015ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

‘அமெரிக்கன் ஹசல்’ திரைப்படத்தில் நடித்த ஆண் நடிகர்களைவிட ஜெனிஃபர் லாரன்ஸ் மற்றும் ஏமி ஆடம்ஸ் ஆகிய பெண் நடிகர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதாக அந்த மின்னஞ்சல் செய்திகள் தெரிவித்தன.

ஆஞ்சலினா ஜூலி போன்ற பிரபலங்களை சில தயாரிப்பாளர்கள் அவமதிப்பது போன்ற செய்திகளும் அதில் இருந்தன.

சோனி நிறுவனத்தின் படம் ஒன்றை ஏற்றுக் கொள்ள மறுத்த லியனார்டோ டிகாப்ரியோ “வெறுக்கத்தக்கவர்” என்று அழைக்கப்பட்டார் என்ற செய்தியும் அதில் வெளியானது. -BBC_Tamil