இப்ரஹீமை கைது செய்ய 4 நாட்கள்: மில்லியனர் ஆனால் தற்கொலை குண்டுதாரி..

இலங்கையில் சரக்கு பொருட்களை இறக்குமதி செய்வதில் 3ம் நிலையில் உள்ள பெரும் செல்வந்தர் என்று கூறப்படும் இப்ரஹீமை நேற்றைய தினம்(வியாளன்) அன்று தீவிரவாத பிரிவினட் கைதுசெய்துள்ளார்கள். இவரது பிள்ளைகளில் 2 பேர் தற்கொலை தாக்குதலில் ஞாயிறு அன்று இறந்துள்ளார்கள். ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக இவர் மீது எவரும் கை வைக்கவில்லை. எந்த ஒரு கைதும் இடம்பெறவில்லை. இவருக்கு தெரியாமல் 2 பிள்ளைகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற வாய்ப்பே இல்லை. ஆனால் இலங்கை பொலிசார் இவரை கைதுசெய்ய தயக்கம் காட்டி வந்தார்கள். வெளிநாட்டு மீடியாக்களில் இவரது பெயர் அடி பட ஆரம்பித்தது.

பின்னர் அமெரிக்க எப்.பி.ஐ இலங்கை சென்ற பின்னரே இப்ரஹீமை இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைதுசெய்து, முதல் தர சிறையில் அடைத்துள்ளது. இவருக்கு TV நல்ல கழிப்பறை எல்லா வசதிகளும் உள்ளதாக , அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இப்ரஹீம் அரிசி, பருப்பு, கராம்பு போன்ற சரக்குகளை இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்று வந்தார்.சொல்லப் போனால் இவர் ஒரு பில்லியனர். இவரது வியாபார நிலையத்தில் பல நூறு வேலையாட்கள் உள்ளார்கள். இவர்கள் கடந்த 3 வருடமாக ஒரு விடையத்தை அவதானித்து உள்ளார்கள். அது என்னவென்றால் இபரஹீம் மற்றும் இவரது குடும்பத்தினர் மிக மிக மதவாதிகளாக மாறியது தான்.

சாதாரண முஸ்லீமாக இருந்த இப்ரஹீம் மித மிஞ்சிய மதவாதியாக மாறி. கடும் சட்ட திட்டங்களை தனது வேலை இடத்தில் கொண்டு வந்துள்ளார். அங்கே வேலை செய்யும் பலர் இந்த மாற்றத்தை அவதானித்துள்ளார்கள். ஆனால் எவரும் இவரது மகன்களும் இவ்வாறு தீவிரவாதிகளாக மாறுவார்கள் என்று அவர்கள் எண்ணிப் பார்ததே இல்லை.

-athirvu.in

TAGS: