முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கு வருகிறது ஆப்பு; விரைவில் கைது செய்யப்படலாம்?

புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கின்றார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியான புனித உயிரத்த ஞாயிறு தினத்தன்று ஸ்ரீலங்காவில் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையே தொடர்பிருப்பதாக தென்னிலங்கையில் செயற்படுகின்ற கடும்போக்குவாத அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன், உள்ளிட்டவர்களை கைது செய்யும்படி பொதுபல சேனா அமைப்பு அண்மையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை கையளித்திருந்தது.

இதுதவிர, நாடாளுமன்றத்திலும் பொது மேடைகளிலும் குறித்த அரசியல் தலைவர்களை கைது செய்வதற்கான கோரிக்கைகளை தென்னிலங்கை கடும்போக்குவாத அரசியல்வாதிகள் முன்வைத்து வருகின்ற போதிலும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்தோ அல்லது அரச தரப்பிலிருந்தோ இதற்கான பதில் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்று விஜயம் செய்த மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறித்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை கைது செய்வதற்கான முறைப்பாட்டை செய்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக முறையிட்டுள்ளோம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்கள் நடத்துள்ளன.

இந்த இஸ்லாமிய இனவாதக் கும்பலுக்குப் பின்னால் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத்சாலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ஆகியோர் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜேதாஸவும் சுமந்திரன், விமல் வீரவன்ச, எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்டவர்களும் சபையில் வைத்து கூறியுள்ளனர். முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்த வைக்க வேண்டாம் என முஜிபுர் எச்சரித்த நிலையில், வஹாப் குழுக்களுடன் ரிஸாட் பதியூதீனும், அவருடைய உறவினர்கள், அலுவலக உறுப்பினர்கள் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ள நிலையிலும் அவர்கள் இன்னும் கைதாகவில்லை.

ஆனால் திகன மோதலையடுத்து 10 மணித்தியாலங்களிற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் விசாரணை நடைபெற்றது. பியல் நிஷாந்தவிடமும் விசாரணை நடைபெற்றது. அவர்களுக்கு ஒருசட்டம், ஆனால் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களுக்கு இன்னுமொரு சட்டம்.

இந்த அரசாங்கம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அஞ்சுகிறது. இதுசம்பந்தமான விசாரணை சுயாதீன முறையில் நடப்பதற்காக ஹிஸ்புல்லா, ரிஷாட், முஜிபுர், அசாத்சாலி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்”

-athirvu.in

TAGS: