கேஎல்-இல் அமைதிப் பேரணிகளுக்காக வரையறுக்கப்பட்ட இரண்டு இடங்கள்

பாடாங் மெர்போக்கும் ஜாலான் ராஜாவும் அமைதிப் பேரணி நடத்துவதற்கான இடங்களாக அரசு இதழில் வரையறுக்கப்படும் என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் அறிவித்தார்.

அந்த இடங்களில் பேரணி நடத்துவோர் இனி போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.

“ஆனால், அந்த இடங்களுக்குச் சொந்தக்காரர்களின் அனுமதியைப் பெறுவது அவசியம்”. முகைதின் இன்று நாடாளுமன்றத்தில் அமைதிப் பேரணி (திருத்த) சட்டவரைவைத் தாக்கல் செய்தபோது இதைத் தெரிவித்தார்.