வாக்காளர் வயதைக் குறைக்கும் சட்டவரைவு இரண்டாம் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டது

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வாக்காளர் வயதை 18க்குக் குறைப்பதற்கு வழிகோலும் சட்டவரைவை இரண்டாம் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதைத் தாக்கல் செய்து உரையாற்றிய மகாதிர், அரசமைப்பைத் திருத்தம் செய்ய முனையும் சட்டவரைவுக்கு ஆளும்கட்சியினர் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் ஆதரவளித்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதை வெற்றிபெற வைத்து வரலாறு படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா.

சட்டவரைவு வாக்களிக்கும் வயதைக் குறைப்பதால் இனி வாக்காளர் எண்ணிக்கை பெருகும், அது 22.7 மில்லியனாக உயரப் போகிறது என்றாரவர்.

அச்சட்டவரைவு வாக்காளர் வயதைக் குறைப்பதுடன் வயது வந்ததும் தானாகவே வாக்காளராவதற்கும் வகை செய்கிறது