அன்வார்: காணொளி உண்மையானால் அஸ்மின் பதவி விலக வேண்டும்

பாலியல் காணொளி தொடர்பில் ஒரு திட்டவட்டமான கருத்தைத் தெரிவிக்காதிருந்த பிகேஆர் தலைவர் அன்வார் இன்று திடமான ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

காணொளி உண்மையானதுதான் என்று நிறுவப்பட்டால் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் பதவி விலக வேண்டும் என்றாரவர்.

“தொடக்கத்தில் அவர் பதவி விலக வேண்டியதில்லை என்பதுதான் என் கருத்தாக இருந்தது. ஆனால், விசாரணை நடந்து வருகின்றது. அதில் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகத்தான் வேண்டும்”, என்றார்.

அதே வேளையில் காணொளியில் ஆடவர் இருவர் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவது தெரிகிறதே தவிர, போலீசாரால் அவர்களை இதுவரை அடையாளம் காண முடியவில்லை என்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.