மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) ஆண்டறிக்கை முதல்முறையாக எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
1999ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சுஹாகாம் ஒவ்வோராண்டும் ஆண்டறிக்கையைத் தயாரித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால், இதுவரை எந்தவொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் அது விவாதிக்கப்படவில்லை.
ஆனால் இந்த ஆண்டில் அது விவாதிக்கப்படும். அக்டோபர் 7-இல் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தானே அந்த அறிக்கையைத் தாக்கல் செய்யப்போவதாக சட்ட அமைச்சர் லியு வூய் கியோங் கூறினார்.
“19 ஆண்டுகளாக முந்தைய அரசாங்கம் அதை விவாதிக்க இடமளிக்கவில்லை. பக்கத்தான் ஹரப்பான் புதிய அரசாங்கம் முதல்முறையாக சுஹாகாம் ஆண்டறிக்கையை விவாதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது”, என லியு இன்று காலை கோலாலும்பூரில் சுஹாகாமின் 20 ஆண்டு விழாவைத் தொடக்கி வைத்தபோது கூறினார்.