தியாகி திலீபனின் 32வது நினைவு தினம் நல்லூரில் அனுஷ்டிப்பு!

தமிழர் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கந்தசாமி கோயில் வீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவடைந்த தியாகி திலீபனின் 32வது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை அனுஷ்டிக்கப்பட்டது.

நல்லூரில் இன்று காலை முதல் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே, வடக்கு- கிழக்கின் பல இடங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

-http://4tamilmedia.com

TAGS: