மேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது – எழுத்து மூல வாக்குறுதியை வேட்பாளர்கள் தரவேண்டும் – சீ.வீ.கே.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

குறித்த உறுதிப்பாடுகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

“வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் நாம் பேச வேண்டும் அல்லது அவர்கள் எம்முடன் பேச வேண்டும்.

இனப்பிரச்சினை, அரசியல் கைதிகள் விடயம், காணி விடயம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் போன்றவை தொடர்பாக, அதேபோல் பௌத்த மேலாதிக்கம் தொடர்பாக வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் விடயதானத்தோடு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் பொதுவாக பேச்சுக்களில் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எது எவ்வாறாக இருந்தாலும் இம்முறை தங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

-www.tamilcnn.lk

TAGS: