காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  சிறுவர்கள் உள்ளடங்களான உறவுகள், நாட்டில் சிறுவர் தினம் கொண்டாடப்படும் இன்றையதினத்தில் (01), மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு – காந்தி பூங்காவுக்கு முன்னாலும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு முன்னாலும் இந்தக் கவனயீர்ப்புகள் நடைபெற்றன.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகள் எங்கே?, அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டுமென, அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

-tamilmirror.lk

TAGS: