அஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன், கட்சியிலிருந்து விலக மாட்டேன்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியில் சேரத் திட்டமிடுவதாக முன்னாள் பிகேஆர் தலைவர் சைட் உசேன் அலி கூறியிருப்பதை மறுத்தார்

“நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிகேஆர் உறுப்பினர்கள் மிகப் பெரிய அதிகாரத்தைக் கொடுத்துள்ளனர். எனக்கு மட்டுமல்ல. மொத்தக் குழுவுக்கும்.

“கடந்த கட்சித் தேர்தலில் (மத்திய தலைமை மன்றத்தில்) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குமேல் பெற்றோம். எனவே, நான் கட்சியிலிருந்து விலக எந்தக் காரணமுமில்லை”, என்றாரவர்