ஆர்டிஎஸ் திட்டத்தை அரசாங்கம் தள்ளிப்போடுகிறதா? ஊடகத்தைச் சாடினார் அமைச்சர்

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், ஜோகூர் பாரு- சிங்கப்பூர் விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம்மீது முடிவெடுப்பதை அரசாங்கம் மீண்டும் தள்ளிப்போட முனைவதாகக் கூறும் ஒரு ஊடகச் செய்தியைச் சாடினார்.

இன்று முகநூலில் அது குறித்து பதிவிட்ட லோக், பெயர் குறிக்கப்படாத ஓர் அதிகாரியை மேற்கோள்காட்டி த ஸ்டார் அச்செய்தியை வெளியிட்டிருக்கிறது என்றார்.

“உறுதிப்படுத்தப்படாத செய்தியை, பெயர் குறிக்கப்படாத ஓர் அதிகாரி சொன்னதை வைத்தா முதல்பக்கச் செய்தியை வெளியிடுவது?”, என்றவர் சாடினார்.

“பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று பிற்பகல் மணி 3க்கு ஜேபி(ஜோகூர் பாரு)-இல் முக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது”, என்றும் லோக் பதிவிட்டுள்ளார்.