கணக்குத் தணிக்கை அறிக்கையில் திருத்தம் செய்ய நஜிப் கூட்டம் கூட்டினார்-அலி ஹம்சா

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் சில பகுதிகளை அகற்றுவது பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தைக் கூட்டியதாக இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த அரசாங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் நஜிப்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் சில பகுதிகளை அகற்றுவதற்காக நஜிப் அக்கூட்டத்தைக் கூட்டினார் என்றாரவர்.

1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் திருத்தம் செய்ய உத்தரவிட்டதாக நஜிப்மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசுத்தரப்புச் சாட்சியாக அலி ஹம்சா சாட்சியமளித்தார்.