எம்ஏசிசி அதிகாரி அடித்தார்: மூன்று போலீஸ்காரர்கள் புகார்

அண்மையில் ஷா ஆலமில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) சிலாங்கூர் அலுவலகத்துக்கு வாக்குமூலம் கொடுக்கச் சென்ற தங்களை எம்ஏசிசி அதிகாரி ஒருவர் அடித்ததாக மூன்று போலீஸ்காரர்கள் புகார் செய்துள்ளனர்.

அம்மூவரும் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைமைகத்தில் போதைப்பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒரு வழக்கு வீசாரணைக்கு உதவ அவர்கள் எம்ஏசிசி அலுவலகம் சென்றிருந்தனர்.

டிசம்பர் 24-இலும் 26-இலும் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்கையில் அந்த எம்ஏசிசி அதிகாரி கன்னத்தில் அறைந்தாராம், குத்தினாராம், காலால் உதைத்தாராம்.

அவருக்கு எதிராக மூவரும் போலீசில் புகார் செய்தனர்.

-பெர்னாமா