மாஸ்லீவின் ராஜினாமா: குரோனித்துவ நியமனங்களுக்காகவா அல்லது சீர்திருத்தங்களை தகர்க்கும் முயற்சியா?

கல்வி அமைச்சராக இருந்த மஸ்லீ மாலிக் தனது அமைச்சின் போது, ஒரு குறிப்பிட்ட முஸ்லீம் அமைப்புடன் இணைந்தவர்களை நியமித்ததாகவும், அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சுக்குள் விமர்சிக்கப்பட்டது. அதுவே அவர் ராஜினாமா செய்ததன் காரணமாக அமைந்தது எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இருப்பினும், மலேசியாகினியுடன் பேசிய சில கல்வியாளர்கள் இதற்கு ஒரு எதிர் வாதத்தை முன்வைக்கின்றனர். அமைச்சகத்திற்குள் உள்ள சிலர் மாஸ்லீயின் ராஜினாமாவை அவரது சீர்திருத்த முயற்சிகளை தகர்த்தி நிறுத்தும் வாய்ப்பாகவும், முந்தைய நிலைக்குத் திரும்புவதற்கான சந்தர்ப்பமாகவும் கருதுகின்றனர்.

“முந்தைய நிலை மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, சீர்திருத்தங்களுக்கான மாஸ்லீயின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே சீர்திருத்தங்களை இக்ரம் (ஒரு இஸ்லாமிய தன்னார்வ தொண்டு நிறுவனம்) ஊடுருவல் போலவே சித்தரிக்கின்றனர்”.

“அமைச்சில் நாசவேலைக்காரர்களையும் சதிகாரர்களையும் குறித்து பொதுமக்கள், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை ஆகியவற்றை எச்சரிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று கல்வி உலகில் மதிப்பிற்குரிய நபராக இருக்கும் ஒருவர் அநாமதேய நிபந்தனையின் பேரில் இதை மலேசியாகினியிடம் கூறினார்.